Tuesday, July 16, 2013

பிரித்தானிய எல்லைக்காவல் பொலிஸாருக்கு மேலதிக அனுமதிகள்.

நாட்டு மக்களினது மாத்திரமல்ல சுற்றுலா பயணிகளது தொலைபேசி அழைப்புக்களையும் ஒட்டுக்கேட்க முடியும்.

பிரிட்டிஷ் அரசாங்கம் தமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் தமது நாட்டு மக்களினதும் தொலை பேசி உரையாடல்களை ஒட்டு கேட்பதற்கு பிரிட்;டிஷ் எல்லை பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் நபரொருவரை 9 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு இச்சட்டத்தின் மூலம் பிரிட்டிஷ் பொலிஸாருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேநேரம் பிரிட்டிஷ் பொலிஸார் பயன்படுத்தும் இலத்திரணியல் அதிர்வுடன் கூடிய ஆயுதங்கள் பல்வேறு இதய கோளாறுகளுக்கு வழிவகுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் மூலம் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் எனவும் தி கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. குறித்த ஆயுதங்களால் உருவாகும் அதிர்வுகள் காரணமாக இதய கட்டமைப்பில் மாற்றங்கள் இடம்பெறுவதாகவும் அதன் மூலம் மரணம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com