போதையில் மகனை கடித்துக்குதறிய தந்தை!
அளவுக்கு அதிகமாக மதுபாணம் அருந்தி விட்டு மனைவியை தாக்கியதனை அவதானித்த மகன் இடையில் சென்று தந்தையை தடுக்க முட்பட்ட போது தடுக்க வந்தது தன் மகன் என்பதுகூட தெரியாதளவுக்கு போதையில் நின்ற தந்தை மகனை பலமாக கடித்துக்குதறியுள்ளார்.
சம்பவம் நேற்று(18.07.2013) இரவு அச்செழு மேற்கு சட்டக்கார பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சம்பவத்தால் பலத்த கடிகாயங்களுக்குள்ளான கஜன்சன் (வயது 13) யாழ் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச்சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு வழங்கிய தகவலைஅடுத்து கடித்துக்குதறிய தந்தையை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்து விசாரணையை மேற்கொணட பொலிஸாரிடம் தந்தை, தன்னை மனைவியும், மகனும் கடுமையாக தாக்கியதாகவும் அதற்கு பதிலாகவே தான் மகனை கடித்து குதறியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment