Monday, July 15, 2013

அரசாங்கத்துடன் இணைந்துவிட சம்மதம் என்று தன் சொன்னால், மகிந்தர் மறுகணமே கொழும்புக்கு ஹெலியொன்றை அனுப்புவாராம்!

‘நான் இந்நாடு யுத்த்த்தில் வெற்றிபெறுவதற்காக என்ன செய்தேன்? சிறையில் அடைக்கப்பட்டதும் துன்பங்களையெல்லாம் எவ்வாறு சகித்துக் கொண்டேன் என்ற தெளிவு மற்றும் அறிவு திறமைகளைப் பயன்படுத்தி இந்நாட்டில் அல்லற்படும் மக்களுக்களின் வெற்றிக்காக என்னை அர்ப்பணிப்பேன்’ எனஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா தம்பதெனியில் குறிப்பிட்டுள்ளார்.

தம்பதெனிய நகரத்தில் இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றின் போதே பொன்சேக்கா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் குறிப்பிடும் போது,

‘நாட்டை அழிப்பதற்காகத் திடசங்கற்பம் பூண்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக உயிரைப் பனயம் வைத்து போர் புரிந்து வெற்றி கண்டோம். அதுதான் எங்களது முதலாவது போர். நான் அன்று கொடுத்த வாக்குறுதியைச் சரிவரக் காப்பாற்றினேன். இது எங்களது இரண்டாவது போர். இந்நாட்டை அழிவுக்குள்ளாக்கி மிகவும் மோசமான முறையில் ஆட்சி நடாத்துகின்ற ஆட்சியாளர்களுக்கு எதிராக நடக்கின்ற போர். இது நாட்டில் துன்புற்றுக் கொண்டிருக்கும் பெரும்பான்மையினருக்காக நடாத்தப்படவுள்ள போர்.

இந்தப் போரில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். அடிபட்டு நொருங்கியிருக்கின்ற பொதுமக்களின் பொதுமக்கள் வெற்றி பெறுவதற்காக நான் மிகவும் உறுதியுடன் செயற்படுவேன்.

2010 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் அவரது கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு என்னை அழைத்தார். தேசியப் பட்டியல் மூலம் என்னைப் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதாகச் சொன்னார்.

இன்று மகிந்த ராஜபக்ஷவை நான் விளித்து, நான் உங்கள் கட்சியுடன் இணைந்துகொள்ள விருப்பமாக இருக்கின்றேன் என்று சொன்னால் போதும், கொழும்புக்கு உடனே வருமாறு கோரி எனக்கு உலங்குவானுர்தியொன்றை அனுப்புவார். இதுதான் இன்றைய நிலைப்பாடு.

அரசாங்கமும், எதிர்க்கட்சியும் இணைந்து இன்று பயணமொன்று மேற்கொள்வதை நாங்கள் காண்கிறோம். தத்தம் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு மட்டுமே அரவணைப்புக் கிடைக்கிறது. தம் அடிமைகளுக்கு மட்டுமே சேவை செய்கின்ற நடைமுறையே தற்போது இருசாராரிடமும் இருக்கின்றது.

இன்று பொதுமக்களின் முகத்தைப் பார்க்கும்போது அவர்களுக்குள் தேவைப்பாடும், விரக்தியுமே காணப்படுகிறது. பாடசாலைகளுக்குச் செல்கின்ற கஷ்டப் பிரதேச பிள்ளைகளில் பெரும்பான்மையினர் போசாக்கின்மையால் துன்புறுகின்றனர். மகிந்த சிந்தனையை நாங்கள் மந்த சிந்தனையாகவே காண்கின்றோம். வெற்றிலைக்குப் புள்ளடியிட்ட 45 இலட்சம் மக்கள் இன்று வாழ வழிதெரியாமல் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றனர்.’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment