Tuesday, July 9, 2013

சம்மாந்துறையில் 'ஸ்ரெப்ளர்' சத்திர சிகிச்சை வெற்றி! (படங்கள் இணைப்பு)

கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தன்னியக்க ஸ்டெப்ளர் மெசின் பயன்படுத்தப்பட்டு இன்று (09) நோயாளி ஒருவருக்கு செய்யப்பட்ட சத்திரசிகிச்சை பூரண வெற்றியளித்துள்ளதாக சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் ஏ. டபிள்யு .எம். சமீம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான சத்திர சிகிச்சை கிழக்கு மாகாணத்தில் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும் மேலைத்தேய நாடுகளில் குறிப்பாக சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலைகளே இவ்வாறான சத்திர சிகிச்சைகளை செய்கின்றன . எனினும், பிரபலமான எமது நாட்டு வைத்தியசாலைகளில் தற்போது இவ்வாறான சத்திர ச்கிச்சைகள் செய்யப்படுகின்றன.

ஆனால் வளப்பற்றாக்குறையுடன் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில் எம்மால் செய்யப்பட்ட இவ்வாறான சத்திர சிகிச்சை பெரும் பிரயத்தனமான நடவடிக்கையாகும். குறிப்பாக மூல நோய் உள்ளவர்களுக்கு அறுவை செய்யாமல் தன்னியக்க ஸ்டெப்ளர் மெசின் பயன்படுத்தப்பட்டு செய்வதனால் வலியோ அல்லது இதன் பின்னர் மீண்டும் மூல நோய் ஏற்படுவதற்க்கு வாய்ப்போ இல்லை என அவர் தெரிவித்தார்.

இச்சத்திர சிகிச்சைக்கு முழுமையாக மயக்கவோ கூடுதலான நேரமோ தேவைப்படாது எனவும் தெரிவித்த சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமீம், இதன் நம்பகத் தன்மையை வெளிப்படுத்த சத்திர சிகிச்சை செய்த இடத்துக்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கினார்

வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்தியர் வை. டி .எம். அஸீஸ் விசேடமாக இச்சத்திர சிகிச்சையை பார்வையிட்டார். இதே நேரம் மேலும் ஒரு வருக்கு சிறு நீராக அறுவை சிகிச்சையும் அங்கு இடம் பெற்றது .சிறு நீரகத்தில் இருந்து மூன்று கற்கள் வெட்டி அகற்றப்பட்டன.

இவ்வாறான சத்திர சிகிச்சைகள் செய்வதென்றால் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களையும் ,வைத்தியசாலைகளையும் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில்தான் பெற முடியும் எனினும் எந்த வசதியும் இல்லாத சம்மாந்துறை வைத்திய சாலையில் இவ்வாறான பாரிய அறுவைச் சிகிச்சைகளை வழங்கும் வைத்தியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இப்பிரதேச அரசியல்வாதிகளும் மக்களும் இதுபோன்ற வைத்திய சாலைக்கு உதவ முன்வர வேண்டும்.

(இஸ்ஹாக் -கல்முனை)


2 comments: