சீமான் கைது.
தடையை மீறி விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் சமீபத்தில் மரணமடைந்த இயக்குநர் மணிவண்ணன் படத்தை விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த ரங்கநாதபுரத்தில் திறந்து வைப்பதற்காக இன்று மதியம் சென்றிருந்தபோது சீமான் கைது செய்யப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் மரணத்தைத் தொடர்ந்து அங்கு மீண்டும் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து தர்மபுரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேபோல் கலப்பு திருமண பிரச்சினைகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டங்களோ, போராட்டங்களோ, சாலை மறியல்களோ, சாதி சங்க கூட்டங்களோ நடத்தக்கூடாது, சாதிய மோதல்களை தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை மீறிச்சென்றபோதே சீமான் கைது செய்யப்பட்டுள்ளான்.
0 comments :
Post a Comment