புகுஷிமா அணு உலையின் தலைமை நிர்வாகி புற்று நோயால் மரணம்
புகுஷிமா அணு உலையில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த மசாவோ யோஷிடா புற்று நோயால் உயிரி ழந்துள்ளார். அவரது இழப்பிற்கும் அவரது வேலைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என அணுஉலை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டில் ஜப்பான் நாட்டை உலுக்கிய பூகம்பம்-சுனாமியால், புகுஷிமாவில் உள்ள அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது அணு உலையில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தவர், மசாவோ யோஷிடா. புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த 58 வயதான யோஷிடா சிகிச்சை பயனின்றி மரணம் அடைந்தார்.
இதையொட்டி அணு உலை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புற்று நோய்க்கும், யோஷிடா புரிந்த பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. சுனாமியின்போது அணு உலையை சீரமைப்பதற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டவர், யோஷிடா என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய நடவடிக்கையால் மிகப்பெரிய பேரழிவு தடுக்கப்பட்டது.
0 comments :
Post a Comment