சுயநினைவை இழந்தார் கவிஞர் வாலி
நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட கவிஞர் வாலி(82) கடந்த யூன் 7ம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கவிஞர் வாலி சுயநினைவை இழந்துவிட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன
ஒரு வார காலத்துக்கு பின்பு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வாலியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததையடுத்து உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.
எனினும் தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் சிகிச்சை பெற்று வரும் கவிஞர் வாலி தற்போது சுயநினைவை இழந்துவிட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment