பதவியை இராஜினாமா செய்து அரசுடன் இணைந்தார் தயாசிறி!
ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி தயாசிறி ஜயசேகர தனது பதவி இராஜினாமா செய்வதாக இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். தான் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் சுயவிருப்பி்ன் பேரிலேயே விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த இவர் வட மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து அரசாங்கம் சார்பில் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட தான் எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
மேலும் அரசாங்கத்தின் வெற்றிக்காக செயற்படுவேன் என பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலதிக விபரங்களை வெகுவிரைவில் தான் வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதே சந்தர்ப்பத்தில், இன்று பாராளுமன்றில் விசேட நிகழ்வொன்று நடைபெறவுள்ளதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்திற்கு வருகை தருமாறு எதிர்க்கட்சி அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment