கிளி.குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பம்!
யப்பானிய அரசிற்கும் இலங்கை அரசும் இணைந்து கிளிநொச்சி நீர் வழங்கல் புனர்நிர்மாணத்திட்டத்தை நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ்குணவர்த நேற்று(16.07.2013) சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யப்பானிய அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையே 2012 பங்குனி மாதம் ஆறாம் திகதி கைச்சாத்திடப்பட்ட மானிய அடிப்படையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் 677 மில்லியன் (யென்) ஜப்பான் அரசின் நிதியும், இலங்கை அரசின் 740 மில்லியன் ரூபா செலவிலும் கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
2புனர்நிர்மாணப்பணிகள் நிறைவுற்றதும் கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையமானது நாளொன்றுக்கு 3800கன மீற்றர் சுத்திகரிக்கப்பட்ட நீரை உற்பத்தி செய்து 100 கிலோ மீற்றர் நீளமான விநியோக குழாய்களூடாக கரைச்சி பிரதேச செயலக பிரிவிலுள்ள பொன்னகர், பாரதிபுரம், மலையாளபுரம், விவேகானந்தநகர், உதயநகர், ஆனந்தபுரம், தொண்டமான்நகர், கனகாம்பிகை குளம், இரத்தினபுரம், கிளிநகர், மருதநகர், கனகபுரம், திருநகர் வடக்கு மற்றும் தெற்கு, கணேசபுரம், ஆகிய கிராமங்களும் கண்டாவளை பிரதேசத்தில் குமரபுரம், பரந்தன்நகர், தட்டுவன் கொட்டி கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர்விநியோகத்தை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் மூலம் 40,000 மக்களுக்கு மேல் பயனடையவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவித்ததுடன் இதற்கான ஓப்பந்தம் 07.06.2013 அன்று யப்பானிய நிறுவனமான டைனோவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு 2014 ஆண்டு ஆவணி மாதம் புனர்நிர்மாணப்பணிகள் நிறைவடையும் எனவும் சபை யினரால் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாளொன்றுக்கு 500கன மீற்றர் நீரை சுத்திகரிக்கும் நிலையம் ஒன்று கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு நீர் சுத்திகரிக்கப்பட்டு இத்திட்டத்தின் பணிகள் நிறைவுறும் வரைக்கும் நீர் தாங்கி பாரஊர்திகள் மூலம் மக்களுக்கு விநியோக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட தேசிய நீர்வழங்கல் வடகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் காரியாலயமும் நேற்று(16.07.2013) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment