கல்கமுவையில் சரீஆச் சட்டமாம்! காதலித்ததால் பெண்ணின் முடி அபேஸ்!
ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் யுவதியொருவரின் முடி வெட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
கல்கமுவ, மொன்னம்குளம், அல்ஹஸ்னா ஜும்ஆப் பள்ளியிலேயே குறித்த யுவதியின் முடி வெட்டப்பட்டுள்ளதுடன், அவ்வேளை தலையில் காயம் ஏற்பட்டதால் தற்போது கல்கமுக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண், தான் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த வாலிபன் ஒருவனைக் காதலிப்பதாகவும் தனது குடும்பத்தினர் அதற்கு விரோதம் தெரிவிப்பதாகவும், தனது காதலனைச் சந்திக்கச் சென்று திரும்பி வருகையில் தன்னை ஏமாற்றி பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக தனது முடியை (கூந்தலை) வெட்டியதாகவும் குறிப்பிட்டுகின்றார்.
இதேவேளை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பேச்சாளர் ஒருவர் இவ்விடயம் பற்றிக் கருத்துரைக்கும்போது, சரிஆச் சட்டம் இலங்கையின் சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை எனவும், இந்நடவடிக்கையானது குற்றச் செயல் என்றும் குறிப்பிட்டுகிறார்.
பாதிப்புக்குள்ளான யுவதியின் தகவல்களின்படி தற்போது குற்றமிழைத்தவர் பற்றி அறியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இது நோன்புக் காலம் என்பதால் சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனக் குறிப்பிடுகின்ற பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
(கேஎப்)
1 comments :
இப்படியான காட்டுமிராண்டி செயல் பாடுகள் அவர்களை அவர்களாக தனிமைப்படுத்துவதாக அமைகின்றது. அதன்பின்னர் எப்படி மற்றைய இனத்தவர் மேல் குறைகூற முடியும்?
Post a Comment