பழிக்குப்பழி வாங்கவே சென்னை தொழிலதிபரை கொலை செய்தேன் - பெண் தாதா
பழிக்குப்பழி வாங்கவே சென்னையில் புளியந்தோ ப்பைச் சேர்ந்த தொழிலதிபரை வெட்டிக் கொலை செய்தேன் என பெண் தாதா ஒருவர் தெரியவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் விஜி என்ற விஸ்வநாதன். சொந்தமாக லொரி வைத்து இருந்தார். கடந்த புதன் இரவு 10.00மணி அளவில் இவர் தன்னிடம் பணிபுரியும் குமார் என்ற வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். புளியந்தோப்பு பொலீஸ் நிலையம் அருகில் அம்பேத்கார் கல்லூரி வீதிச் சந்திப்பில் வைத்து 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் காத்திருந்தனர் இவர்களின் வருகைக்காக காத்திருந்தனர்.
விஜி என்ற விஸ்வநாதனும், குமாரும் வருவதை கண்ட அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளை மறித்தனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன குமார் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினார். விஸ்வநாதனும் அங்கிருந்து தப்பி ஓடினார்.
ஆனால் அவரை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பலத்த வெட்டுக்காயம் அடைந்த விஸ்வநாதன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். கொலையாளிகள் தாங்கள் வந்த மோட்டர் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 29-ந் திகதி அதே பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா என்ற பெண்ணின் கணவர் ராஜி கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தற்போது கொலையுண்ட விஸ்வநாதனின் மனைவி கண்ணகி, அவரது தம்பி ராஜேஷ் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
லொரி தொழில் செய்வது தொடர்பாக கண்ணகிக்கும் ஸ்டெல்லாவுக்கும் போட்டி இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் கண்ணகி, ஸ்டெல்லாவின் கணவர் ராஜியை அப்போது கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
இதற்கு பழிக்குப் பழி வாங்கும் வகையிலேயே ஸ்டெல்லா, நேற்று இரவு ஆள்வைத்து கண்ணகியின் கணவரை போட்டுத் தள்ளியிருப்பதாக பொலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது தொழில் போட்டி மற்றும் பழிக்குப் பழி வாங்கும் வகையில் 2 பெண்களே கொலைக்கான சதி திட்டத்தில் ஈடுபட்டு தாதாவாக மாறி யிருப்பது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
0 comments :
Post a Comment