Sunday, July 7, 2013

ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது த.தே.கூ.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையே கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு கட்சிக்கும் தலா மூவர்வீதம் பதினைந்துபேரை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பதென்று முன்னர் இணக்கம் காணப்பட்டிருந்தது. அந்த விடயத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு கட்சிக்கும் தலா நால்வர்வீதம் இருபது பேரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒருங்கிணைப்புக்குழுவில் உள்ளடக்கப்பட்டு அந்த ஒருங்கிணைப்புக்குழுவின் எண்ணிக்கையை மொத்தம் இருபத்தொருபேராக அதிகிரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டதுடன், இந்த ஒருங்கிணைப்புக் குழுவானது எதிர்வரும் 11ஆம் திகதி சந்திப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில், தமிழரசுக் கட்சி சார்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சங்கையா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், என். சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், புளொட் சார்பில் சிவநேசன் (பவன்) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

1 comments :

Anonymous ,  July 7, 2013 at 8:12 AM  

They may make changes,they may increase the numbers of the cordinating group,but the final results would be emptiness or zero..afterall a power struggle is going on.Who will be the CM,who will capture the seat...and who is lucky to enjoy the life as theCM.
The tamils have a long traumatic and bitter experiences.They need only social and economic developments which could make the people to have a peaceful and happy life. Those who pretend themselves as the leaders of the tamil society will go on with the cheating drama
until their last breath.Hope we will stop remaining as fools

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com