Saturday, July 20, 2013

படகு மூலம் அவுஸ்ரேலியா வந்து தஞ்சம் கோரும் எவருக்கும் அகதி அந்தஸ்து கிடையாது-அவுஸ்ரேலிய அரசு

அவுஸ்ரேலியாவுக்கு படகுகளில் வந்து தஞ்சம் கோரும் எவருக்கும் இனிமேல் அவுஸ்ரேலியாவில் அகதிகளாக வந்து குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அவுஸ்ரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலுக்கு முன்னர் குடிவரவுக் கொள்கையை சீர்திருத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை அறிவித்த கெவின் ருட், பாப்யுவா நியூகினியா அரசுடன் இது குறித்து கையெழுத்தாகியிருக்கும் ஒரு உடன்பாட்டின்படி, அவுஸ்ரேலியாவுக்கு வரும் தஞ்சம் கோரிகள் அந்தத்தீவுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் கோரிக்கை மதிப்பிடப்படும் என்றார்.

உண்மையான அகதிகள் பாப்யுவா நியூகினியாவில் தங்க அனுமதிக்கப்படுவர். ஆனால் தஞ்ச விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டவர்கள் திரும்பவும் அவர்களின் சொந்த நாடுகளுக்கோ அல்லது ஒரு மூன்றாம் நாட்டுக்கோ அனுப்பப்படுவர் என்று பிரதமர் கூறினார்.

அதேவேளை படகுப் பயணிகளுக்கு இனி வரும் காலங்களில் புகலிடம் வழங்கப்படமாட்டாது என அவுஸ்ரேலிய பிரதமர் அறிவித்திருந்தார் இதற்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பை வெளியிட்டுள்ளதுடன் இந்த அறிவிப்பின் மூலம் எதிர்வரும் காலத்தில் சட்ட விரோத ஆட்கடத்தல்காரர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

No comments:

Post a Comment