Sunday, July 21, 2013

பிரதேச செயலாளர்களுக்கான அதிகாரங்களைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்!

பிரதேச செயலாளர்களுக்கு தற்போதுள்ள அதிகாரங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, தங்களது அதிகாரங்களையும் விஞ்சி செயற்படுவதற்காக பிரதேச செயலாளர்கள் முன்னெடுப்பவை பற்றி அடிக்கடி அறிக்கைகள் வந்த வண்ணமிருப்பதனால் இந்த முடிவினை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளதாக அரச நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.பீ. அபேக்கோன் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப 1992 ஆம் ஆண்டில் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் சம்பந்தப்பட்ட அதிகாரங்களை இல்லாமற் செய்து, அவற்றை மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணிகள் சம்பந்தப்பட்ட கடமைகளைச் செய்யும்போது, பிரதேச செயலாளர்கள் ஒருதலைப்பட்சமாகச் செயற்படுவதாக்க் குறிப்பிட்டுள்ள அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்களுக்கு எதிராக வருகின்ற முறையீடுகளில் பெரும்பாலானவை காணி சம்பந்தப்பட்டவையாகவே இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment