Tuesday, July 9, 2013

இலண்டனில் பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த இலங்கை வைத்தியர் பணிநீக்கம்.

இலண்டனில் பொது இடங்களில் வைத்து பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளை ஐபோனில் படமெடுத்ததாகக் கூறப்படும், இலங்கை வைத்தியரொருவர் தொடர்பான வழக்கு மருத்துவ நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

32 வயதான திலங்க கசுன் இதமல்கொட என்ற குறித்த வைத்தியர் லண்டனில் உள்ள டிரபல்கார் சதுக்கத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பெண் பொலிஸ் ஒருவரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது இவரது ஐபோனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பெண் பொலிஸையும் குறித்த வைத்தியர் படமெடுத்துள்ளமையும், பல்வேறு இடங்களில் வைத்து இதே போன்று பெண்களை லாவகமாக சந்தேகம் வராத வண்ணம் படமெடுத்துள்ளமையும், தெரியவந்துள்ளது.

இதன்போது தன்னை கைதுசெய்ய வேண்டாம் என்றும் மன்னித்து விட்டு விடும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார். சிரேஷ்ட வைத்தியரான இவர் முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவர் எனவும் தற்போது இருதயம் தொடர்பான ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கொழும்பில் அமைந்துள்ள தனியார் ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்ற இவர், கடந்த 2005 ஆம் ஆண்டு அபெர்டீன் பல்கலைக்கழகத்தில் இவர் பட்டம் பெற்றுள்ளார். பிரித்தானிய மருத்துவ கழகம் இவ்வழக்கு தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும், அவர் தற்காலிகமாக பணியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2 comments :

Anonymous ,  July 9, 2013 at 4:48 PM  

May be he is having some psychological disorder specially over
women.Let him recover from this severe illness and be a good doctor to the patients.

Anonymous ,  July 10, 2013 at 7:52 AM  

Sometimes it is really hard to understand the human behaviourism.Genetic abnomalities may be the cause for this kind weakness.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com