சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படாத யாழில் நமக்கென்ன வேலை? நாங்கள் யாழில் போட்டியிட மாட்டோம்....! –ஹெல உறுமய
தங்களது கட்சி எந்தவொரு வேட்பாளரையும் வட மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளராக நியமிக்காது எனவும், வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்காக ஐக்கிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் ஜாத்திக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டார்.
வட மாகாணத்திற்காக தங்களது வேட்பாளர்களை நியமிக்காத்தற்கானகாரணம் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட சிங்களவர்களை தேர்தலுக்கு முன்னர் மீள் குடியமர்த்தாமையே என்றும் அவர் குறிப்பிட்டார்.
வட மேல் மாகாண மற்றும் மத்திய மாகாணத்திற்காக ஏற்புடைய வேட்பாளர்களின் பெயர்களைப் பதிவதற்காக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டதாகவும், எதிர்வரும் நாட்களில் பொருத்தமான வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் தயார்செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment