கொஞ்சக்காலமா எங்கட எம்பி ஒராள காணவில்லை என்று மக்கள் கவலையாய் இருக்கினம்.. அவருக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று மக்கள் ஏக்கத்தில்.. (அக்கறையில் என்று நினைத்துப்போடாதேங்கோ) என்ன இப்படி ஆச்சு தென்டு எம்பியின்ர தும்பிகளிட்ட விசாரிச்சுப் பார்த்ததிலை மனிசன் யோசிச்சு யோசிச்சு மனநிலை பாதிக்கிற அளவிற்கு வந்திட்டுதாம் என்று அவயள் வெதும்யினம்...
யார்ரா இந்த எம்பி என்று உங்களுக்கு விளங்கியிருக்கும்தானே.. சப்ரா சனங்களின்ர திட்டுக்கள் என்றா என்ன சும்மா திட்டுக்களோ.. அதுகள் வியர்வை கொட்டி வாயை கட்டி வயிற்றைக் கட்டி எல்லோ உவன் பாவிட்ட கொடுத்ததுகள்.. அந்த திட்டுக்களால பிடித்த சனியன் உப்பதான் ஐயாவை ஆட்ட தொடங்கியிருக்குதாம்.
உந்த கறுமங்களிடம் சுருட்டின பணத்தை அப்பிடியே கனடாவிற்கு அனுப்பிப்போட்டு மிச்ச சொச்சத்தில் உந்த பேப்பரை நடத்தி மனுசன் தெம்பாய் 25 வருசத்தை கடத்திட்டுது இவ்வளவு காலமும் பேசாம விட்டுட்டு எங்கட அரசாங்கம் இவர் கொள்ளையடித்த காசுக்கொம்பனி பற்றி விசாரிக்க போகுதென்றவுடன் மனுசன் அப்பலோவில படுத்தது.. படுத்தது தான் இன்னும் எழும்பேலையாம்.
சரி அதை எப்பயாவது அரசாங்தோடு பின்வாசலாலட கதைச்சு சமாளிக்கலாம் என்று நினைச்சிருந்த மனுசனுக்கு அந்த உதயனில் இருக்கிற சடைநன் பாhத்த வேலையால் புதிய தலையிடி ஒன்றும் வந்திட்டுது.. எங்கட தாடிக்காரரைப் பற்றி ஏதோ எழுதிப்போட்டாங்கள் போல கிடக்கு அந்த மனுசனும் கொஞ்ச நஞ்சம் இல்லாமல் 10000 மில்லியன் கேட்டு ஒற்றைக்காலில் நிக்குது.. ஒவ்வொரு வழக்கு வரும் போது நீதிமன்றத்தில் நீதிபதி என்ன சொல்லுறார் என்டு நேரடியாக் கேட்டுக்கொண்டு இருக்கிறாராம் எம்பி கட்டிலில படுத்த படி..
என்ன செய்வதென்று தெரியாமல் நிர்வாகத்தை நீங்களே பாருங்கோ என்று வேறு யாருக்கோ கொடுக்கப்போறார் என்று ஒரு கதையும் ஓடித்திரியுது.
சரி இது ஒரு பக்கம் இருக்க இவையின்ர இந்த விளம்பரத் தந்திரம் தெரியுமோ உங்களுக்கு.. (தயவு செய்து வேறு பேப்பர் நிறுவனங்கள் இவையின்ர தந்திரத்தை கொப்பி பண்ணவேண்டாம் இது அவையின் இரகசியத்திட்டம்) என்னட இவையின்ர பேப்பரில மட்டும் செத்தவிட்டு விளம்பரம் போட்டாப்பிறகு 31 நாள் விளம்பரங்களும் போடுறாங்கள் என்று நீங்கள் யோசிக்கலாம்.. அந்தக்கதையை கேட்டயளென்டால் நீங்கள் மூக்கில கைவைப்பியள்.
சரி செத்த வீடு தானே என்று விட்டால் அந்த வீட்டுக்கு ஒரு அனுதாபக் அட்டை வரும் ' உங்கள் துன்பத்தில் நானும் பங்கெடுக்கிறன்' ஈ.சரவணபவன் என்று சரி அனுதாபம் அந்த மனுசனும் போட்டுருக்கே என்று நினைச்சுக்கொண்டிருக்க பின்னால கோல் ஒன்று வருமாம் என்ன 31 நெருங்குது போல பேப்ரில் ஒரு காப்பக்கம் விளம்பரம் கோடுங்கோவன் ஐயாவும் அனுதாபம் அனுப்பினவர் போல அவர் தான் கேட்கச் சொன்னவர் என்பினமாமாம். சுனங்களும் நன்றியுள்ள சனங்களெல்லே முதலாளி எங்களுக்கு அனுதாபமும் அனுப்பினவர்தானே என நினைத்து சரி போட்டா போச்சு என்பினமாம்.. இது தான் முப்பத்தி ஒன்றுக்கதை...
மரண அறிவித்தல் கதை பெரியகதை ஒவ்வொரு ஊரிலையும் குறிப்பாக ஆசுபத்திரிகளிலையும் உளவாளிகள் வைத்திருக்கினமாம்.. யாராவது மண்டையை போட்டால் உடனடியாக உதையண்ட மணி டாங் டாங் என்று அடிக்குமாம்.. உடனே நம்பரை வாங்கி என்ன செய்கிறது இப்படி நடந்து போட்டுது.. சரி சரி இனி செய்ய வேண்டியதை பார்ப்பம் என்று சொல்லி விளம்பரக்கதையை தொடுப்பினமாம்.. எப்படி வண்டி சும்மா வண்டியா சப்ரா வண்டியெல்லே..
புட்டுப் புட்டா சரவணபவன் எம்பிய சாத்தியிருக்கிறியள்...! சப்ரா வண்டி இனியுந்தான் ஓடுமோ... அப்பலோவில படுக்கிற சரவணபவன் பற்றி சுடர்ஒளியும் செய்திவெளியிடலாமல்லோ... வெள்ளைச் சேட் சரவணா பார்த்திருப்பார் அல்லோ...
ReplyDeleteMay be some delays in God`s decision,but it´s sure,you get it.
ReplyDeleteHe is a marvellous example to TNA.
ReplyDeleteEvery pleasure only for a limited period and it will disappear.
ReplyDelete