Wednesday, July 10, 2013

எல்.ரி.ரி.ஈ யினரின் தனிநாட்டுக் கோரிக்கை சாத்தியப் படப்போவதில்லை! அது அழிந்து விட்டது - முன்னாள் எல்.ரி.ரி.ஈ

எல்.ரி.ரி.ஈ யினரின் தனிநாட்டுக் கோரிக்கை எப்போதும் சாத்தியப் படப்போவதில்லை எனவும் அது அழிந்து விட்ட தென்றும், இணங்கிய அரசியல் நடத்தப் போவதாக எல்.ரி.ரி.ஈ யினரின் முன்னாள் ஊடக பேச்சாளரும் வட மாகாணத்துக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதல மைச்சர் வேட்பாளருமாகிய தயா மாஸ்டர் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக வியளாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு பங்களிப்பு செய்ய வேண்டிய கடப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு உள்ளது எனவும், இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இணங்கி தீர்வு காண முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, 'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்லில் வெற்றி பெற்றால், இணங்கிய அரசியலில் ஈடுபட போவதாகவும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, முன்னாள் போராளிகளின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுவதுடன், போராளிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்பதையே வலியுறுத்தியுள்ளதாகவும்' அவர் கூறினார்.

2 comments:

  1. The Survival of the fittest

    ReplyDelete
  2. மனிதருக்கு நற் சிந்தனைகள், நல் எண்ணங்கள், ஆக்கபூர்வமான அறிவு, உலக யதார்த்தம் , வாழ்வின் அர்த்தம், தத்துவம்,தெளிவு எல்லாம் காலம் கடந்து தான் ஏற்படுகிறது.
    ஆனால், போனது போனது தான். எனவே இனியாவது திருந்தி, சிந்தித்து நடவுங்கள் மக்களே.

    ReplyDelete