இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தார்கள் என்று கடந்த மே மாதம் 6ம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 25 பேரையும் இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த மாதம் மேற்படி வழக்கு யாழ்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபொழுது யாழ் மேல்நீதிமன்ற ஆணையாளர் விஸ்வநாதன் இந்த 25 பேரையும் ஜீலை நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகேந்திரராஜா 25 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களும் யாழ் மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்தொழில் திணைக்கள்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment