Wednesday, July 3, 2013

துரித அபிவிருத்தியை நோக்கி “ரனவிரு அபரல்ஸ்”

திரு.டேவிட் மெரிக் என்பவரால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் 27.03.1996 ஆம் திகதி "ரனவிரு அபரல்ஸ்" என்ற இலங்கை இராணுவத்தின் ஆடைத் தொழிற்சாலை தற்போது நலன் விரும்பிகளின் ஒத்து ழைப்புடன் யுத்தத்தில் காயமடைந்த இலங்கை இராணுவ படைவீரர்களைக் கொண்டு நடாத்தப்படுகின்றமை குறிப்பிட த்தக்கது.

இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு பாதுகாப்பு நிதியத்திலிருந்து ஆரம்ப கட்டமாக நிதியுதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இலங்கை அபரல்ஸ் ஏற்றுமதி கழகம் உள்ளடங்கலாக தேசிய அபரல்ஸ் ஏற்றுமதி கழகம், சிங்கர் ஸ்ரீலங்கா லெப் டிரேடிங் லிமிட்டட் போன்றவை இவ் ஆடையகத்தை நிர்மாணிப்பதற்கு தமது அநுசரணையை வழங்கியிருந்தன. இத்தொழிற்சாலையில் சேவையாற்றுவதற்கு தேவையான பயிற்சிகளை ரைஸ்டார் அபரல்ஸ் வழங்கியிருந்தது. இத்தொழிற்சாலை 25 இயந்திரங்களுடனும் 90 படை வீர்ர்களுடனும் 4 அதிகாரிகளைக் கொண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இத்தொழிற்சாலையின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் இ.எம்.ஜி விக்ரமநாயக்க கருத்து தெரிவிக்கும்போது, இத்திட்டமானது இராணுவத்தினருக்கு உயர் தரத்தில் சீருடையை வழங்குவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதாகும் எனக்குறிப்பிட்டார்.

இத் தொழிற்சாலையின் நிர்வாக நடவடிக்கைகளானது தலைமையகப்பிரிவு, ஆய்வுப்பணியகப்பிரிவு மற்றும் உற்பத்திப் பிரிவு என மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது. இப்பிரிவுகளின் கீழ் படையினரைக் கொண்டு தொழிற்சாலையின் நிர்வாகத்தை இலகுவாக செய்யக்கூடியதாக இருக்கின்றது.

தற்போது இத் தொழிற்சாலையில் சுமார் 300 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன, 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேவையாற்றுகின்றனர். வினைத்திறனை கருதும்போது சொற்ப அளவு கழிவுத் துணிகளே வீசப்படுகிறது. அந்த அளவுக்கு உச்ச பயனையும் பெறக்கூடியவாறு உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கமைய 2012 ஆம் ஆண்டு “நெசனல் கிறீன்” விருது, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தேசிய உறபத்திக்கான விருதுகளையும் இத் தொழிற்சாலையானது பெற்றுள்ளமை தொழிற்சாலையின் வளர்ச்சிக்கு முன்னுதாரணமாகும்.

தொழிற்சாலை அமைந்துள்ள வளாகமானது சூழல் மாசுறலை பெரிதும் தவிர்க்கும் வகையில் சுத்தமாகவும் பசுமையுடனும் காட்சியளிப்பது கண்கவர் காட்சியாகும்.

No comments:

Post a Comment