இலங்கையில் இளம்பிள்ளைவாதம் என்கின்ற போலியோ வைத் தடுப்பதில் வெற்றி எய்தப்பட்டுள்ளதை அவ்வப்போது கிடைக்கும் தகவல்களும் செய்திகளும் தெரிவிக்கின்றன.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரே தினத்தில் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் சிறாருக்கும் குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். சர்வதேச விமான நிலையங்களில்கூட இம் மருந்து வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்று இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காண்பது அரிதாகியிருக்கிறதே தவிர ஓரு காலையோ இரண்டு கால்களையுமோ இழந்தவர்களைக் காண்பதற்கு முடியுமாயிருக்கிறது. இதில் சிறுவர் முதற் கொண்டு முதியோர் வரை அடங்குகின்றனர். இவர்களது கால்களைக் கவர்ந்து சென்றவை நம் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாகப் புதைக்கப்பட்டிருக்கும் மிதி வெடிகள்.
போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட காலப் பிரிவில் மிதி வெடிகளை அகற்றுவதற்காக வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்த குழுவில் ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது.
அவர் தமது அனுவங்களை பகிர்கொண்டார் யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட'ஒவ்வொரு மிதி வெடியையும் அடையாளங் கண்டு அகற்றும் போதும் ஓர் உயிரைக் காப்பாற்றி விட் அல்லது ஒருவரின் ஊனத்தையும் அதனுடன் சம்பந்தப்பட்டவரது குடும்பத்தில் விளையும் துயரங்களை நான் தடுத்து விட்டேன் என்கிற ஆறுதலும் திருப்தியும் ஏற்படுகின்றது எனக்குறிப்பிட்டார்.
இலங்கையில் ஒரு காலத்தில் இந்திய அமைதிப்படை இருந்தது என்பது உங்களுக்கு தெரியும் விடுதலைப் புலிகளுடனான மோதலில் மிதி வெடி ஆபத்தை அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. தங்களுக்குப் பரிச்சயம் அற்ற சூழலில் அவர்களில் பலர் கால்களை இழக்கும் நிலை ஏற்பட்ட போது அதைத் தவிர்ப்ப தற்காக ஒரு காரியம் செய்தார்கள்.
இந்தியாவிலிருந்து கப்பல் கப்பலாக செம்மறி ஆடுகள் வந்திறங்கின. ஒவ்வொரு இராணுவக் குழுவும் ஒரு செம்மறிக் கூட்டத்தை முன்னால் நடக்க விட்டுப் பின்னால் நடந்தது. முன்னால் செல்லும் ஆடுகள் கண்ணிவெடிகளில் அகப்பட்டால் அவை அக்குழுவினரின் அன்றைய உணவாக மாறியது. ஆடுகள் பொதுவா கவே துரத்தினால் கலைந்து வெவ்வேறு பக்கங்களில் தறி கெட்டு ஓடுவன. ஒன்றைச் சொல்ல வேறு ஒன்றைச் செய்பவனை 'எட செம்மறி' என்று அழைப்பதும் சொன்னதை உடனடியாகப் புரிந்து கொள்ளாதவனை 'இவன் ஒரு செம்மறியடா' என்று திட்டுவதும் யாழ்ப்பாணத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது.
No comments:
Post a Comment