அமெரிக்கா விடுத்த அறிக்கையில் சில விடயங்களை நீக்க வேண்டும்! இலங்கை வெளிவிவகார அமைச்சு.
இலங்கை வரும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு அமெரிக்கா வினால் விடுக்கப்பட்டிருக்கும் பயண எச்சரிக்கையில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக் கூடியதாகவுள்ள சில விடயங்கள் நீக்கப்பட அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சு அமெரிக்க அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்காவின் அரசியல் விவகாரங் களுக்குப் பொறுப்பான அதிகாரிக்கும் வெளிவிவகார அமைச்சின் மேலைத்தேய நாடுகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் தலைமையிலான அதிகாரி களுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இலங்கை அரசாங்கம் சார்பில் அமெ ரிக்காவிடம் மேற்கண்டவாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதென அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம கூறினார்.
அத்துடன் நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தக் கூடியவறான குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பிலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டி ருப்பதாகவும் அவர் கூறினார். அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங் களுக்குப் பொறுப்பான மேற்படி அதிகாரியுடனான சந்திப்பின்போது அமெரிக்க அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் பயண எச்சரிக்கை இலங்கையின் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமற்றதென விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கையில் தற்போது அமைதி நிலவுவதால் அமெரிக்க அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் மேற்படிச் செயன்முறையானது நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதுடன் உல்லாச பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதெனவும் இதன்போது எடுத்துக் கூறப்பட்டது.
அத்துடன் மோதல்களையடுத்து நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டிருக்கும் பயண எச்சரிக்கையில் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சில அம்சங்கள் நீக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment