Sunday, July 21, 2013

சட்டங்கள் நிறைவேற்றப்பாட்டால் மாணவர்கள் படிக்க முடியாத நிலை மாத்திரம் அல்ல உரிமையைக் கூட இழக்க நேரிடும்.

பல்கலை கழகங்களில் சரிவர சட்டங்கள் நிறை வேற்றப் படுமானால் சில வேளைகளில் மாணவர்கள் உரிமையை கூட இழக்க நேரிடும். அல்லது பல்கலை கழகத்தில் படிக்க முடியாத நிலை ஏற்படும் என தென் கிழக்கு பல்கலை கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்

கல்முனை தமிழ் சங்கமும் மாணவர் மீட்பு பேரவையும் இணைந்து கல்முனை கல்வி வலயத்தில் 2012ஆம் ஆண்டு கல்வி பொது தராதர பரீட்ச்சையில் 03ஏ சித்தி பெற்ற 25 தமிழ் ,முஸ்லிம் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (20) கல்முனை நால்வர் கோட்டம் தாமரை மண்டபத்தில் தமிழ் சங்க தலைவர் கலாநிதி பரதன் கந்தசாமி தலைமையில் நடை பெற்றது.

கிழக்கு பல்கலை கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கொபிந்தராஜா ,தென்கிழக்கு பல்கலை கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் ,கல்முனை தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலாளர் கே.லவநாதன், கண்ணகி இலக்கிய கூடல் தலைவர் த.கோபால கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்

கல்முனை தமிழ் சங்கத்தின் ஆலோசகர் அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியு அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பொதிகை என்ற சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப் பட்டது.

பிரதம அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே தென் கிழக்கு பல்கலை கழக உப வேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் மேற்கண்டவாறு பேசினார் . அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

உலகத்தில் சமாதானத்தை ஏற்படுத்த கூடிய நற் பிரஜைகளை உருவாக்கும் இக்கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம் . சமுகத்தின் சொத்துக்களாக மாணவர்கள் இருக்கின்றீர்கள் உங்களால் இந்த சமூகத்தில் பல் வேறுபட்ட மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

மாணவர்களாகிய நீங்கள் வீதிக்கு சென்று போராட்டம் நடத்துகின்றீர்கள் ,பல்கலைக் கழகத்துக்கு எதிராக பிரசாரத்தில் ஈடு படுகின்றனர் , தேவையற்ற குழப்பங்களை பல்கலை கழகத்தில் உருவாக்கின்றனர். இவற்றையெல்லாம் பெற்றோர்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

ஏனெனில் தற்போது நாட்டில் பல்வேறு பட்ட சட்டங்கள் அமுல் படுத்தப் படுகின்றன . மாணவர்களை சிறந்த வழியில் நடத்துவதற்கும் பல்கலை களகங்களை இலகுவாக நடாத்துவதற்கும் திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன . அந்த சட்டங்களை பல்கலை கழகங்களில் நாங்கள் சரிவர் நிறை வேற்று வோமானால் மாணவர்களின் உரிமையை கூட இழக்க நேரிடும் என உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் தெரிவித்தார் .

இந்த நிகழ்வில் 17 தமிழ் மாணவர்களும்,08 முஸ்லிம் மாணவர்களுக் குமான பாராட்டு நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டது, மாணவர்களின் பெற்றோர்களு நிகழ்வி கலந்து கொண்டனர்


முனைமகன்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com