வட்டுக்கோட்டை பாழடைந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு
யாழ்.வட்டுக் கோட்டைப் பிரதேச வெற்றுக் காணியில் இருந்த பாழடைந்த கிணறொன்றிலிருந்து பச்சிளம் சிசுவொன்றின் சடலத்தை இன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று விடுமுறை என்பதால் வேற்றுக்காணியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அருகில் இருந்த கிணற்றில் இருந்த சிசுவின் சடலத்தை பொம்மை என எண்ணி கல்லால் எறிந்து விளையாடிக் கொண்டிருந்த போது பொம்மையின் உடலில் இருந்து குடல் வெளியில் வருவதைக் கண்டு தமதுபெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர் கிணற்றுக்குள் இருப்பது பொம்மையில்லை சிசுவின் சடலம் என அறிந்து கொண்டதால் சம்பவம் தொடர்பாக வட்டுக் கோட்டைப் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதும் சம்பவ இடத்திற்கு வருகைதந்த வட்டுக்கோட்டை பொலிசார் கிணற்றில்இருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மல்லாம் நீதிமன்ற நீதிபதி சடலத்தைப் பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துக் செல்லுமாறு உத்தரவிட்டார் இச்சடலமானது பிறந்து ஓரிரு நாளான சிசுவின் சடலம் என்பதுடன் மேலதிக விசாணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment