Sunday, July 7, 2013

நவம்பரிலிருந்து மும்மொழியிலும் தேசிய அடையாள அட்டை! புதிய திட்டத்திற்கிணங்க தொழில் பற்றிய விபரம் உள்ளடக்கப்டமாட்டாது!

ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் நவம்பர் மாதத்தி லிருந்து தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழி யிலும் தேசிய அடையாள அட்டைகளை வழங்கவிருப்ப தாகவும் இவ்வாறு வழங்கப்படும் அடையாள அட்டையில் ஒருவருடைய பெயர் மாத்திரம் பதிவு செய்யப்படுவதுடன், அவர் செய்யும் தொழில் பற்றிய விபரம் சேர்க்கப்பட மாட்டாதென்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார்.

தற்போதைய நவீன இயந்திரங்களின் உதவியுடன் அடையாள அட்டைகளை ஒரு மணித்தியாலயத்திற்குள் தங்களால் வெளியிட முடியுமென்றும், ஒருவருக்கு இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருப்பதற்கோ ஒரே இலக்கத்தில் இரண்டு அடையாள அட்டைகள் வழங்கப்படுவதையோ முற்றாக தடை செய்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கைவிரல் அடையாளமும் அடையாள அட்டையில் சேர்த்துக் கொள்ளப்படு வதனால், ஒருவர் எங்காவது குற்றம் புரிந்திருந்தால் அவரை இலகுவில் இனங்காண்பதற்கு உதவியாக இருக்குமென்றும், ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. ஈய ஈழ தேசியம்July 7, 2013 at 12:16 PM

    அடையாள அட்டையில் செய்யும் தொழிலை பதிவு செய்வது என்பது இந்தியா வழங்கிய ஆலோசனையா?
    வளர்ச்சி அடைந்த நாடுகளில் தொழல் விபரம் அடையாள அட்டையில் குறிப்பிடபடுவதில்லை. ஒருவர் ஒருவருடத்திலே பல தொழில்கள் மாறலாம்.
    நவம்பர் மாதத்தி லிருந்து தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மும்மொழியிலும், ஒருவருடைய பெயர் விபரம் மட்டுமே தேசிய அடையாள அட்டையில் வழங்கபடுவதும் சிறப்பானதாகும்.

    ReplyDelete