Tuesday, July 9, 2013

ஹிஜாபைத் தடை செய்யவும்...! மீண்டும் ஒலிக்கிறது பொதுபல சேனாவின் குரல்

முகத்தை மூடியிருப்பதனால் பயங்கரவாதிகளுக்கு தங்க ளது பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மிகவும் இலகுவாக இருப்பதனால், முஸ்லிம் பெண்களின் உடையாகிய "ஹிஜாப்" உடையை தடைசெய்யுமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது பொதுபல சேனா.

பயங்கரவாதிகள் தங்களது செயல்களை மிகவும் சூட்சும்மானமுறையில் மேற்கொள்வதற்கு உதவியாக ஹிஜாப் இருப்பதாக பொது பல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரர் குறிப்பிடுகிறார்.

பாதாள உலகின் தலைவராகவிருந்த மாமாஸ்மியை பாதுகாப்புப் பிரிவினர் கொலை செய்தமை குறித்து அவர்களுக்குத் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ஞானஸார்ர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு முன்பாக இருப்பவர் பெண்ணா ஆணா என்பதை அறிந்து கொள்ளக்கூடிய உரிமை ஒருவருக்கு இருப்பதால் இந்த உடையானது மனித சமூகத்திலுள்ள உரிமைகளை விடவும் விஞ்சிய ஒன்றாக இருக்கும் எனக்குறிப்பிடுகின்ற தேரர், இந்த ஆடைக்குள் ஒழிந்திருந்து நடாத்தப்படுகின்ற பயங்கரவாதச் செயல்களும், போதைவஸ்து விற்பனை முதலானவை அரச பாதுகாப்புக்கும் ஊறுவிளைவிக்க்க்கூடியதும் சவால்விடக்கூடியதுமாகும். எதிர்காலத்தில் வர்க்க பேதமொன்று ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புர்கா ஆடையை தடை செய்வது மனித உரிமை மீறலில் உள்ளடங்காது என பெல்ஜியம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதை உதாரணமாகக் காட்டியுள்ள தேரர், தற்போது பல நாடுகளில் இந்த ஆடை தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பிரான்ஸில் இந்த ஆடையுடன் நடமாடினால் 150 யூரோ தண்டப் பணம் அறவிடப்படுகின்றது எனவும், அவ்வாறு ஒரு பெண் புர்கா அணியக் கட்டுப்பாடு விதிப்பதானது 30000 யூரோ தண்டப் பணத்திற்குரிய குற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comment: