Wednesday, July 10, 2013

யாழில் கப்பம் கோரல், கொள்ளை, கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி மாநகர சபை உறுப்பினர் கைது!

யாழில் அண்மைக்காலமாக நடைபெற்றுவந்த கப்பங்கோரல் மற்றும் கொள்ளை,கடத்தல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் மற்றும் அவருடைய தம்பி, நன்பர்கள் என நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் பல லட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளையும் கப்பமாக அறவிட்டதுடன் அவற்றை தட்டிக் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.

இது மட்டுமல்லாது உதவி செய்வதாக கூறி பல பெண்களின் வாழ்க்கையையும் தர்சிங் விஜயகாந் நாசம் செய்துள்ள குற்றஞ்சாட்டின் படியே கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் தொடர்ந்து விசாணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இது தொடர்பாக யாழ் மாநகர முதல்வரை தொடர்பு கொண்டு கேட்டபோது கோப்பாய் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விஜயகாந் மேலதிக விசாரணைக்கு என பொலிஸ் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியதுடன் அழைத்துச்செல்லப்பட்டமைக்கான காரணம் ஏதும் தெரியாது என குறிப்பிட்டார்.

3 comments :

Anonymous ,  July 10, 2013 at 7:44 AM  

It is a big surprise how the people elect these guys as their representatives.The high command of the party has to look deeply into the behaviour of the party members.These are the causes for the downfall of any party.Double game is not a good job at all.

Anonymous ,  July 10, 2013 at 11:27 AM  

EPDP is compelled to do a cleanup.Sympathy,Friendliness,excellent behaviourism ,helping mind are important to promote the great value of the party.

Anonymous ,  July 10, 2013 at 3:12 PM  

நீங்கள் வெள்ளை வேட்டிகட்டி, தாடிவளர்த்து, சால்வை போர்த்தி, இறைபக்தியுள்ள, நல்ல ஒழுக்கம் கொண்ட, வெள்ளை உள்ளம் கொண்ட, நல்ல மனிதர்கள் போல் மக்கள் மத்தியில் தோன்றுவது மட்டும் போதாது.
உங்கள் வீட்டு அழுக்குகளை சுத்தம் செய்யாமல், மக்களுக்கு சேவை செய்ய முடியாது. தலைவர்களே!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com