Friday, July 19, 2013

சேனாக்களில் உள்ளவர்களுக்கு மாடு அறுப்பது பிடிக்காது... ஆனால் பசுப்பால் குடிக்கலாம்...வேடிக்கையாக இருக்கிறது இவர்களின் பேச்சு....! - ஆரியதிலக்க

மாடுகளை அறுத்தால் பாவம் உண்டாகும் என்று சில தேரர்கள் புதுவகை உபன்னியாசம் பண்ணுகிறார்கள். ஆடுகளை, பன்றிகளை, கோழிகளை ஆயிரக் கணக்கில் கொல்கிறார்கள். மாட்டின் பாலைக் குடிக்கிறார்கள். அதனால் எந்த விதப் பாவமும் உண்டாவதில்லையா? என வினாதொடுக்கிறார் தென் மாகாண சமூக சேவைகள் அமைச்சர் யூ.ஜீ.டீ. ஆரியத்திலக்க.

காலி உலுவிடிகேயில் இடம் பெற்ற கூட்டமொன்றின் போதே அமைச்சர் இந்த வினாவை முன்வைத்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர்,

‘புத்தபெருமான் உயிருடன் வாழ்ந்த காலத்தில் சுந்த சுக்கரிக்க என்பவன் பன்றிப் பண்ணையொன்றை நடாத்தி வந்தான். அன்று அரசபீடத்தில் இருந்த பிம்பிஸார அரசனைப் பார்த்து புத்தபெருமான் பன்றிப் பண்ணையை உடைத்துத் தள்ளுங்கள் என்றோ, சுந்த சுக்கரிக்கவை சிறையில் தள்ளுங்கள் என்றோ கூறவில்லை. புத்த பெருமான் தனது சீடர்களுடன் சென்று பன்றிப் பண்ணையை உடைத்துத் தள்ளவும் இல்லை. அவனுக்கு அடித்து உதைக்கவும் இல்லை. இவ்வாறான சிறந்த வழிகாட்டலுள்ள புத்த சமயத்தை அழித்தொழிப்பதற்காக சில புத்த பிக்குகள் அந்தச் சேனை, இந்தச் சேனை என்ற பெயர் தரித்து அமைப்புக்களை உருவாக்கி செய்கின்ற செயற்பாடுகள் புத்த சமயத்திற்கு இழுக்கினை ஏற்படுத்துவதாக உள்ளது.’ என்றும் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)

1 comment:

  1. முட்டாளே , பால் குடித்தால் மாடு சாகுமா ? கொல்வதற்கும் பால் கரப்பதக்கும் வித்தியாசம் தெரியாதா ?

    வி லைக் பொது பல சேனா.

    ReplyDelete