யாழில் வீட்டுக்கதவை தட்டும் வங்கிக் கடனாளிகள்
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாய செய்கைகளைக் காட்டியும், வீட்டுக் கடன், வாகங்களை லீசிங் கடன் என அதிகளவான வங்கிக்கடன்களைத் தனியார் வங்கிகளிலும் அரச வங்கிகளிலும் பெற்றுக் கொண்டு, அவற்றை மீளச் செலுத்த முடியாத நிலையில் கடன்பட்டோர் தலைமறைவாகி வருவதால் இவர்களைத் தேடி வங்கி உத்தியோகத்தர்கள் வீடுவிடாக செல்கின்றனர்.
யாழ்.மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு விவசாயிகள் வங்கிகளில் சில கமக்கார அமைப்புக்களின் துணையுடன் தவறான தகவல்களை வழங்கி அதிக வங்கிக் கடன்களைப் பெற்று அவற்றைத் துஸ்பிரயோகம் செய்துவிட்டு இன்று வரை குறித்த கடன்களை மீளச் செலுத்தாமல் இருப்பதாக வங்கியாளர்கள் குறிப்பிடுகின்றனர்
வங்கிகள் பல தடவைகள் கடனாளிகளுக்கு அறிவித்தல்களை வழங்கியபோதும் அவர்கள் எந்தவித தொடர்புகளையும் ஏற்படுத்தாத நிலையில் வங்கி உத்தியோகத்தர்கள் தினமும் கடனாளிகளைத் தேடி வீடுவீடாகச் செல்வதுடன் வாங்கிய கடனைத் திருப்பி கட்டாத கடனாளிகள் சிலருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment