Thursday, July 11, 2013

குளித்துக்கொண்டிருந்த தாதியை படம்பிடித்து மாட்டிக்கொண்ட சுகாதாரபிரிவு உதவியாளர் கைது!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரவுநேர கடமை யிலிருந்த தாதி தனது கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 9 மணியளவில் ஓய்வறையில் குளித்துக் கொண்டிருந்த போது, தனது கையடக்கதொலைபேசியின் ஊடாக தாதி குளித்துக்கொண்டிருந்ததை படம்பிடித்த, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுகாதாரபிரிவு உதவியாளரை, எதிர்வரும் 24 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட் டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு தேசிய வைத்திய சாலையில் இரவு கடமையிலிருந்த தாதி கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 9 மணியளவில் தாதி ஓய்வறையில் குளித்துக்கொண்டிருந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்தஅறையிலுள்ள உயரமான யன்னலின் ஊடாக கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி யாரோ தான் குளித்துக்கொண்டிருப் பதனை படம் பிடிப்பதை அல்லது வீடியோ ஒளிப்பதிவு செய்வதனை அவதானித்துள்ளார்.

கூச்சல் குழப்பமிடாத தாதி, திடீரென பாய்ந்து கையடக்க தொலைபேசியையை அபகரித்துவிட்டார். இதனையடுத்து அதுதொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் குறித்த கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து மாளிகாகந்த மேலதிக நீதவான் ரஷந்த கொடவெல முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போது சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலநறுவையைச்சேர்ந்த ஜோசப் யூப் ரொசான் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

...............................

1 comments :

Anonymous ,  July 11, 2013 at 11:00 AM  

He needs a thorough psycho theraphy for an unlimited time,
jail punishment cannot make him a good person.Sex exploitation makes the youngsters so sick,as a result they get into sex trance and do unnatural things.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com