Monday, July 15, 2013

ஆபாசப் பட வீடியோ வைத்திருந்தவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்

யாழ்ப்பாணம் கரவெட்டி இராஜ கிராமத்தில் சோதனை நடத்திய நெல்லியடிப் பொலிஸார் ஆபாசப் பட வீடியோக்களை வைத்திருந்த கரவெட்டியைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்ததுடன் அவர் மீது வழக்கத்தாக்கல் செய்தனர்.

கைதுசெய்த சந்தேக நபருக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த நெல்லியடிப் பொலிஸார் சந்தேக நபரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரணை செய்த பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

No comments:

Post a Comment