Wednesday, July 3, 2013

வடக்கு எப்போது மாறும் சிங்கப்பூராக!

வட பகுதியில் கடந்த காலங்களில் நிலவிவந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நான்கு வருடங்களை கடந்துள்ள நிலையில் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் பல்வேறு வீதிகள், திணைக்களங்கள், என பல்வேறுஇடங்கள் துரித கதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஊடாக செல்லும் ஏ9 பிரதான வீதி உட்பட பல உள்ளூர் வீதிகளும் செப்பனிடப்பட்டு வருவதுடன் ஏ9 வீதி புணரமைப்பு செய்யப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அண்மையில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு பகுதியில் நடைபெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கானவர்களில் பெரும்பாலனவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டிருப்பதுடன். யாழ்ப்பாணத்தை இணைக்கும் மற்றுமொரு பிரதான வீதியான ஏ-32 வீதியின் அபிவிருத்திப் பணிகளும் நிறைவடையும் கட்டத்தை அடைந்துள்ளன.

மாவட்டைத்தையோ அல்லது மாகாணத்தையோ நாட்டையோ பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதானால் சிறந்த வீதிக்கட்டமைப்பு என்பது மிகவும் அவசியம் என்பதாலேயே வீதி அபிவிருத்தியில் கூடுதலாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன் வடபகுதிக்கான புகையிரதப்பாதை , காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கம், பலாலி விமானத்தள விரிவாக்கம் என்பவற்றையும் மேற்கொண்டு வருகிறது.

யாழ்.மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாகாண வீதி அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேளை துரித கதியில் செய்யப்படும் வீதி அபிவிருத்தி பணிகளால் தென் பகுதி சந்தையில் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு கடும் கிராக்கி காணப்படுவதுடன் தொன்பகுதி விவசாய பொருட்களுக்க ஏனைய பொருட்களுக்கு வடபகுதியில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தின் அச்சுவேலி பகுதியில் கைத்தொழில் பேட்டையை மீண்டும் புனரமைப்படுவது போன்று ஏனைய மாவட்டங்களிலும் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க திட்டமிடப்பட்ட வருவதுடன் கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இது மடடுமல்லாது வடபகுதி மாவட்டங்களில் காணப்பட்ட குடிசை வீடுகள் கல்வீடுகளாக காட்சி தருவதுடன் அங்குள்ளவர்கள் அனைவரும் யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மிக வேகமாக மீண்டு வருகின்றதை காணக்கூடியதாக இருக்கிறது.

பற்றைக்காடுகளாக இருந்த வீதிகளின் இரு பகுதிகளும் தற்போது கட்டடங்களாக காணப்படுவதுடன் இந்த பகுதிகளில் முதலிட வெளிநாட்டாளர்கள் பலரும் முன்வந்துள்ளனர்.

இவ்வாறு துரித வேகமாகா வடக்கு அபிவிருததி அடைய வேண்டும் என்றால் அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபைகளும், மக்கள் அரசியல் கட்சிகள் என்பதில் இருந்து விடுபட்டு மாகாணத்தின் அபிவிருத்தியில் ஒன்று படுவார்கள் ஆனால் மிக வேகமாக வடமாகாணம் அபிவிருததி அடையும் என்பதில் ஜயமில்லை

1 comments :

ARYA ,  July 4, 2013 at 2:11 AM  

நெவெர் , சிங்கப்பூர் மக்களிடம் நல்ல குணமும் நல்ல பழக்கவழக்கமும் உள்ளது அத்துடன் நாட்டு பற்றும் உள்ளது , ஆனால் யால்பாநிகளிடம் காட்டுமிராண்டி குணமும் பிரிவினை , மற்ற சமூகத்தாருடன் முரண்பாடு என்பவே உள்ளது, சிங்கப்பூரில் தமிழன் மட்டும் இருந்திருந்தால் சிங்கபூரும் தமிழ்நாடு மாதிரி குப்பை மேடாக மாறி இருக்கும், சீன மக்களின் வலி நடத்தலிலேயே சிங்கப்பூர் முன்னேறியது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com