ரஸ்யாவின் மிதக்கும் அணு சக்தி நிலையம்
உலக நாடுகள் அதிகரித்து வரும் சக்தி தேவையை ஈடுசெய்யும் பொருட்டு, அணுச் சக்தியை பெரிதும் நம்பத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது பல நாடுகள் இதனைக் கைவிட்டுள்ள போதிலும் சில நாடுகள் இன்றும் அணு சக்தியில் தங்கியுள்ளது.
குறி்ப்பாக சொன்னால் நமது அண்டை நாடான இந்தியாவை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்நிலையில் ரஸ்யா மிதக்கும் அனுச்சக்தி நிலையமொன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளதுடன், இதற்கென தயாரிக்கப்பட்டு வரும் பிரமாண்ட கப்பலொன்றிலேயே மேற்படி அணு சக்தி நிலையம் உருவாக்கப்பட்டு வருகின்றது.
இந்தப்புதிய கப்பல் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ரஸ்யாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான ‘பால்டிக் பிளான்டினால்’ நிர்மாணிக்கப்படும் அணு சக்தி நிலையத்துடனான முதல் கப்பல் அகாடிமிக் லொமோனோசோவ் எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இது அந்நாட்டின் பின் தங்கிய பகுதிகளுக்கு சக்தி, குடி நீர் போன்ற வசதிகளை வழங்கும் பொருட்டே இதனை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கப்பலின் நிறை 21,500 டொன்கள் எனவும் 69 பணியாளர்கள் அதில் சேவையில் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றதுடன், இக்கப்பலானது பெரிய தொழில்துறை நிறுவனங்களுக்கும், கடற்கரையிலிருந்து சிறு தொலைவில் அமைந்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கும் சக்தி வழங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment