Saturday, July 6, 2013

செயற்கை கல்லீரலை உருவாக்கிய ஜப்பானிய விஞ்ஞானிகள்!

ஜப்பானின் யோகோஹாமா பல்கலைகழக விஞ்ஞானிகள் டாகானோரி டகேபே, ஹிதேகி டானிகுச்சி ஆகியோர் இணைந்தே உலகில் முதன்முறையாக செயற்கையான முறையில் மூல உயிரணுவிலிருந்து கல்லீரலை உருவாக்கி சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இவர்கள் மூல உயிரணுவிலிருந்து வெற்றிகரமாக கல்லீரலை உருவாக்கியுள்ளனர்.

மனிதனின் உடலிலிருந்து எடுக்கப்படும் உயிரணுக்கள், பல்வேறு உடல் உறுப்புகளாக வளரக் கூடிய ஆற்றல் உள்ளது. எனவே இதை தகுந்த முறையில் தூண்டிவிடுவதன் மூலம், நமக்கு தேவைப்படும் உறுப்பை வளர்த்தெடுக்க முடியும்.

அதிலும் பெரும்பாலும் மூளைச்சாவு அடைந்தோரின் முக்கிய உடல் பாகங்கள் நல்ல நிலையில் இருந்தால், அவை தானமாகப் பெறப்பட்டு பிறருக்குப் பொருத்தப்படுவதுடன் இதே முறையில் கல்லீரலை தானமாகப் பெற நோயாளிகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அத்துடன் ஒரே பிரிவை சேர்ந்த ரத்தம் மற்றும் திசு வகை உள்ளவர்களிடமிருந்து கல்லீரலை தானமாகப் பெற்று பொருத்தினாலும், சில சமயங்களில் ஒவ்வாமை ஏற்பட்டு நோயாளிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் உயிரணுவிலிருந்து கல்லீரலை செயற்கை முறையில் வளர்த்தெடுத்து, அதை அவருக்குப் பொருத்துவதால் எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment