ஜனாதிபதியாக முன்னர் முதலமைச்சராகிக் காட்டட்டும்! ரணிலுக்கு சவால் விடுகிறார் சந்திரசேன
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் அல்லது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் மத்திய மாகாணம் வடமேல் மாகாணம் ஆகிய இரண்டில் ஒன்றில் போட்டியிட்டு முதலமைச்சராகிக் காட்ட்ட்டும் என பிரதியமைச்சர் எஸ்.எம். சந்திரசேன சவால் விடுத்துள்ளார்ز
விக்கிரமசிங்க தனது சவாலை ஏற்று, அவ்வாறு போட்டியிட்டு முதலமைச்சரானால் தனது அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெளியேறுவதாகவும் சந்திரசேன குறிப்பிட்டுள்ளார். இம்முறை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் ஒருபோதும் காணாத வெற்றியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சந்திக்கும் எனவும், ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமன்றி மக்கள் விடுதலை முன்னணியினரும் இன்னும் சரியாக பொதுமக்களின் உள்ளக்குமுறலைச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை எனவும் சந்திரசேன தெளிவுறுத்தியுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment