கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தினை குணப்படுத்த வழிமுறைகள்!
பெண்களை பொறுத்த வரை கர்ப்பம் தரித்தல் என்பது ஒரு பெரிய வரமாகும் ஆனால் கர்ப்பக் காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும் அதில் நீர் கோர்த்தல், முடி கொட்டுதல், உடல் சோர்வு போன்றவற்றுள் உடல் வீக்கமும் ஒன்றாகும்.
பொதுவாக கர்ப்பம் தரித்தல் மற்றும் உடலில் வீக்கம் ஒருங்கே உள்ளது. கர்ப்பம் தரிக்கும் போது வயிற்றில் மட்டும் வீக்கம் உண்டாகாது உடல் முழுவதுமே வீக்கம் உண்டாகும் இவ்வாறு கர்ப்பத்தின் போது வீக்கம் ஏற்பட இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை நீர் கோர்த்தல் மற்றும் அதிக இரத்த அடர்த்தியுமாகும். ஆகவே கர்ப்பத்தின் போது வீக்கத்தை சரிசெய்ய தமிழ் போல்டு ஸ்கை சில பயனுள்ள வழிகளை கொடுத்துள்ளது. அதைப் படித்து, பின்பற்றி வந்தால், நிச்சயம் உடலில் ஆங்காங்கு ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம்.
அடிக்கடி நகர்தல்: கர்ப்ப காலத்தில் நகராமல் ஒரே இடத்திலேயே சோம்பலாக இருந்தால், உடலில் வீக்கம் உண்டாகும். ஏனெனில் சோம்பலுடன் உட்காரும் போது, உடலில் நீர் கோர்க்க செய்து வீக்கம் உண்டாக தூண்டுகிறது. ஆகவே அவ்வப்போது நிதானமான நடையை மேற்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி: கர்ப்பிணிகள், உடலில் ஏற்படும் வீக்கத்தை தடுப்பதற்கு, தினமும் மருத்துவர் பரிந்துரைத்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
நீரில் மூழ்கி இருத்தல்: சிறிது நேரம் நீரில் மூழ்கி இருத்தல், மகிழ்ச்சிகரமாய் உணர வைக்கும். ஆகவே கர்ப்பக் காலத்தில் வீக்கத்தை குணப்படுத்த நீச்சல் பயிற்சி செய்யலாம். அது செய்ய முடியவில்லையெனில், உடலை நீரில் மூழ்கி இருக்க செய்யலாம். ஆனால் நீர் அதிக சூடாக இருக்கக் கூடாது. ஏனெனில் சுடுநீர் கர்ப்பிணிகளின் உடலுக்கு அவ்வளவு உகந்தது அல்ல.
கால்களை நீட்டி வைத்தல்: அலுவலகம் போன்ற பணி இடங்களில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால், அவை கால்களில் வீக்கத்தை உண்டாக்கும். ஆகவே இரத்த ஓட்டமானது சீராக இருக்குமாறு, உடலை நேராக வைத்து அமர வேண்டும். அதற்கு அலுவலகங்களில் மேசைக்கு கீழே ஒரு முக்காலி வைத்து, அதன் மேல் கால் வைத்து கால் மடங்காதவாறு அமரவும்.
இடப்புறமாக படுக்கவும்: கர்ப்பிணிகள் இடது புறமாக படுப்பது, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும் எனவே படுக்கும் போது இடப்புறமாக படுக்கவும்.
உப்பு உட்கொள்வதை குறைக்கவும்: கர்ப்பக் காலத்தில் உடலில் அதிக நீர் தங்கும். அதையே வீக்கம் என்று கூறுவோம். அனைவரும் அறிந்தது போல, உப்பு உடலில் அதிக நீரை தேக்கி வைக்கும். ஆகவே உப்பு உட்கொள்வதை குறைக்க வேண்டும்.
0 comments :
Post a Comment