Tuesday, July 16, 2013

எல்எல்ஆர்சி சிபார்சுகளை நடைமுறைப்படுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதன் நோக்கம் என்ன?

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்தும் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் அவற்றை துரிதபடுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தலைமையில் மகாவலி அதிகார சபையில் நடைபெற்றுள்ளது.

இப்பேச்சுவார்த்தையின்போது ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தும் தேசிய செயற்திட்டத்திற்குரிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதி நிதிகள் 21 பேர் தமது அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளருக்கு விளக்கமளித்துள்ளனர்.

அத்துடன் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு தேசிய செயற்திட்டத்திற்கு மேலதிகமாக உள்வாங்கும் விடயங்கள் தொடர்பாக அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய 53 பரிந்துரைகள் தொடர்பாக லலித் வீரதுங்க அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

மேற்படி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் விசனங்கள் தெரிவிக்கப்படுகின்ற நிலையிலும் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொள்வது குறிபிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment