ஐ.நா.சபை இளைஞர் விவகார தூதுவர் அஹமது அல் ஹெந்தாவி அமைச்சர் டலஸ் சந்திப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களின் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான தூதுவர், அஹமது அல் ஹெந்தாவிற்கும், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும விற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று (05.7.2013) வெள்ளிக்கிழமை கொழும்பு நாராஹேன் பிட்டியில் அமைந்துள்ள இளைஞர் விவகாரமற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு சமாந்தரமாக, நவம்பர் 10ஆம் திகதி முதல் 14 திகதிவரை ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள சர்வதேச பொதுநலவாய இளைஞர் தலைமைத்துவ மாநாடு குறித்து கருத்து பரிமாரிக் கொள்வதே சந்திப்பின் பிரதான நோக்கமாக காணப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் 5ஆண்டு வேலைத் திட்டத்தில் உள்ள பிரதான நோக்கங்களான மகளிர் மற்றும் இளைஞர்களின் அபிவிருத்திக்காக செயல்படவுள்ள வேலைத் திட்டங்கள் குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும இங்கு கருத்தை வெளியிட்டுள்ளதோடு, இவ்வேலைத் திட்டங்களுக்காக ஒத்துழைப்பை வழங்கும் பிரதானநாடாக இலங்கைக்யும் இருக்கிறத என அஹமதுஹெந்தாவி தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு சமாந்தரமாக நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் தலைமைத்துவ மாநாட்டின் முழுமையான ஏற்பாடுகள், மற்றும் ஒத்துழைப்புகள் வழங்கும் நாடான இலங்கை, தற்போது பெற்றுக் கொடுக்கும் உதவிகள் குறித்து தமது மகிழ்ச்சியை தெரிவித்த அல் ஹெந்தாவி இதனை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்னுக்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரை சந்திப்பை தொடர்ந்து அஹமது அல் ஹெந்தவி வெளிவிவகாரஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் சகல நாடுகளினதும் இலங்கைக்கான தூதுவர்களையும் சந்தித்தார்.
பொதுநலவாய இளைஞர் தலைமைத்துவ மாநாட்டை பற்றியும், ஐக்கிய நாடுகளின் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஒத்துழைப்பை பற்றியும், இதன் போது தனது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்
இளைஞர் விவகாரமற்றும் திறன்கள் அபிவிருத்திஅமைச்சின் செயலாளர் கே.ஏ.திலக்கரத்தின, சர்வதேச இளைஞர் விவகாரங்களுக்கான இலங்கைவதிவிட தூதுவர் ரிசாஹொசைனி ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment