வட மாகாண சபை ஐ.தே.க.முதலமைச்சர் வேட்பாளராக சுவாமிநாதன்?
நடைபெறவுள்ள மூன்று மாகாண சபை தேர்தல்களில் ஐ.தே.க வேட்பாளர்கள் தொடர்பாக முக்கிய தீர்மானம் இன்று நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
இதேவேளை, வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி தான் இன்னும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
ஆயினும் வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பிரசாரம் செய்வதில் தான் முக்கிய பங்கு வகிக்கலாம் என்பதை அவர் இதன் போது மறுக்கவில்லை.
0 comments :
Post a Comment