டும்...! டும்...!! டும்!!!தயாசிரி சென்றுவிட்டதால்... பந்தயத்தில் தோற்ற ஹரின் பிரனாந்து தட்டையடிக்கப் போகிறார்..,!
'நான் பெரியவருக்குக் கடைக்குப் போக மாட்டேன். நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே போவேன். நான் பெரியரை அருகிலிருக்க அவ்வாறு சொன்னேன். நீங்களும் அதை விளங்கிக் கொண்டு கட்சியின் வெற்றிக்காகப் பாடுபடுங்கள்' என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பிரனாந்து அப்புத்தளையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தயாசிரி கட்சியை விட்டும் செல்லமாட்டார் என்று நான் பந்தயம் பிடித்துள்ளேன். மேலும், அவ்வாறு அவர் சென்றுவிட்டால் நான் மொட்டையடிப்பேன் என்றும் குறிப்பிட்டேன். அதனால் நான் நாளை மறுநாள் மொட்டையடிக்க வேண்டியுள்ளது. தயாசிரி என்னை மூன்று முறை தொடர்பு கொண்டு, பந்தயம் பந்தயம் போல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.' எனவும் அவர் குறிப்பிட்டார்.
'அவர் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை மிகவும் மோசமான முறையில் விமர்சித்து, மகிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வேன் என்று சபதமிட்டுவிட்டே சென்றார். எப்படியும் ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாதொழிப்பேன் என்றார். அது எவ்வளவு நம்பிக்கைத் துரோகமான செயல்? தயாசிரி போகவிருந்தது இன்று நேற்றல்ல...! ஒன்றரை ஆண்டுகளாக அவர், மகிந்த திருடன், பஸில் திருடன், கோத்தாபய கொலையாளி என்று சொன்னார். என்றாலும் எல்லாம் சுத்தம்! இப்போது நாங்கள்தான் திருடர்கள், கொலை மற்றும் கொள்ளையர்கள். எனது வரலாற்றைச் சொல்வதாக என்னைப் பயங்காட்டுகிறார். எனது வரலாறு அல்ல அவரது வரலாற்றை நாங்கள் சொல்லத் தொடங்கினால் மக்கள் அவரைக் கல்லால் எறிந்து விரட்டியடிப்பார்கள். தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தயாசிரியின் மரண ஊர்வலத்தை நடாத்தி தானமும் கொடுத்து முடிவடைந்துவிட்டது' என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பிரனாந்து குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,
'தற்போது தயாசிரி எனது குடும்பத்தின் முகத்தில் சேற்றைப் பூசுகிறார். நான் அரசியலை விட்டு நீங்கினாலும் எனது தந்தையின் பணம் எனக்கிருக்கிறது. அந்தப் பணத்தால் எனக்கு வாழ முடியும். ஆயினும் நாங்கள் அரசியல் மூலம் ஏதேனும் செய்வோம்.
நிறைவேற்றதிகார சபைத் தேர்தலில் நான் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தயா கமகேவுக்கும் வாக்களிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை அருகில் வைத்துக் கொண்டு நான் சொன்னேன், நான் கரு ஜயசூரியவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் தயாசிரி ஜயசேக்கரவுக்குமே வாக்களித்தேன் என்று. என்றாலும் நான் இன்னும் கட்சியில் இருக்கிறேன்' என்றும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment