ஆசிரியைக்கும் அதிபருக்குமிடையே கள்ளக் காதலாம்...
நவகத்தேகம பாடசாலை ஆசிரியைக்கு முழந்தாழிட்டு நிற்குமாறு கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ள வட மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆனந்த சரத் குமார, தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றத்தின் பின்னணியில் ஒரு விடயம் மறைந்துள்ளதாக குறிப்பிடுகிறார்.
குறித்த ஆசிரியைக்கும் அப்பாடசாலை அதிபருக்குமிடையே கள்ளக் காதல் தொடர்பு இருப்பதே இதற்கு மூல காரணம் என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
எவ்வாறாயினும், தன்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துரைக்கின்ற குறித்த ஆசிரியையான பிரியானி சுசிலா ஹேரத், குறித்த மாகாண சபை உறுப்பினர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறைப்பதற்காக இவ்வாறு அவர் பொய்ப் பிரச்சாரம் செய்வதாகக் குறிப்பிடுகிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment