இலங்கையைச் சேர்ந்த மூவர் பிரித்தானியா, சிட்டிங்பேண் பகுதியிலுள்ள கராஜ் ஒன்றில் வைத்து கைதுசெய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரகசியத் தகவலின் அடிப்படையில் சென். போல் வீதியிலுள்ள பிபீ பெற்றோல் நிலையத்திற்கு சென்ற அதிகாரிகள், அங்கிருந்தவர்களிடம் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் உள்ளனவாவெனக் கேட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த கராஜிலிருந்தவர்களிடம் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், கராஜிலிருந்த 22 மற்றும் 33 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மில்ரன் ரிஜிஸ் பகுதியிலுள்ள வீதியில் 30 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இந்த மூவரும் தங்களது விஸா நிபந்தனைகளை மீறி பணியாற்றிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 3 பேரையும் பிரித்தானி யாவிலிருந்து வெளியேற்றும் முகமாக குடிவரவு தடுப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்
No comments:
Post a Comment