Wednesday, July 31, 2013

யாழில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல்!

வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வேட்புமனுக்களை இன்று(31.07.2013) புதன்கிழமை தாக்கல் செய்துள்ளன.

இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதுடன் இன்று காலை யாழ். மாவட்டத்தில் போட்யிடும் வேட்பாளர்களின் வேட்புமனுத்தாக்குதல் நடைபெற்றதுஇந்த நிகழ்வில் அமைச்சர்களாளன சுசில் பிரேமஜயந்த, டக்ளஸ் தேவானந்தா, றிசாட் பதியுதீன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு (ஈ.பி.டி.பி) 10 ஆசனங்களும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 7 ஆசனங்களும் லங்கா சமசமாஜ கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அகிய கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனமும் வழங்கப்பட்டுள்ளதுடன் முதன்மை வேட்பாளராக ஈழ மக்கள் ஜனநாய கட்சியைச் சேர்ந்த சின்னத்துரை தவராஜா போட்டியிடுகின்றார்.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியில் சி .தவராஜா, க. கமலேந்திரன், ஐ.சிறீரங்கேஸ்வரன், எஸ்.பாலகிருஸ்ணன், ஏ.சூசைமுத்து, சுந்தரம் டிலகலால், அ.அகஸ்டின், கோ.றுஷாங்கன், எஸ்.கணேசன் மற்றும் பெண் வேட்பாளராக திருமதி ஞானசக்தி சிறிதரன் ஆகியோர் போட்டியிடுவதுடன் சிறீலங்கா சுதந்திர கட்சியில் இ.அங்கஜன், மு.றெமிடியஸ், எஸ்.பொன்னம்பலம், எஸ்.அகிலதாஸ், அ.சுபியான், சர்வானந்தன், எஸ்.கதிரவேல் ஆகியோருடன் லங்கா சமசமஜாக் கட்சி ந.தமிழழகன் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் எம்.எம். சீராஸ் என 19 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com