அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றோரின் ஏமாற்று வார்த்தைகளை கேட்டுத்தான் நாங்கள் பேராடினோம் - கருணா.
"தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண சபைக்கு 11 உறுப்பினர்களை அனுப்பியுள்ளார்கள். இவர்கள் என்ன செய்கின்றார்கள்? நாட்டுக் கட்டை போல் இருக்கின்றார்கள்"
அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றவர்கள் கூறிய வார்த்தை களைக் கேட்டு நாங்கள் போராடினோம். ஆனால் அப் போராட்டத்தால் இறுதியில் என்ன நடந்தது? வெறும் அழிவு மட்டும்தான்' என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளர்
மட்டக்களப்பு, படுவான்கரையில் புதுமன்மாரிச்சோலை கிராமத்திற்கு மின்சார விநியோகத்தினைத் வழங்கி வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
30 வருடகால யுத்தத்தினால் பெற்ற பலன்கள் ஒன்றுமில்லை. யுத்தம் நடந்திருந்தால் இன்று மின்சாரம் கிடைத்திருக்காது எனவும் இப்பிரதேச மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் என்னிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க இன்று இந்த மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் ஆனால் யுத்தம் நீடித்திருந்தால் மின்சாரம் என்பது இக்கிராம மக்களுக்கு எட்டாக் கனியாகவே அமைந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
யுத்தத்தினால் நாம் பெற்ற பலன் என்ன என்று கேட்டால் ஒன்றுமில்லை என்றுதான் பதில் கூறலாம். ஆசை வார்த்தை காட்டி வாக்குகளை சூறையாடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வருவார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபைக்கு 11 உறுப்பினர்களை அனுப்பியுள்ளார்கள். இவர்கள் என்ன செய்கின்றார்கள்? நாட்டுக் கட்டைபோல் இருக்கின்றார்கள்.
அரசியலுக்கு ஒருவரை நீங்கள் தெரிவு செய்து அனுப்பினால் அவரால் உங்களுக்கு இலாபம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனுப்பக் கூடாது. ஆசை வார்த்தைகளைக் கூறி பெரிதும் ஏமாற்றப்படுபவர்கள் படுவான்கரை மக்கள்தான்.
அதுபோன்றுதான் கடந்த காலத்தில் அமிர்தலிங்கம், சம்மந்தன் போன்றவர்களின் வர்த்தைகளைக் கேட்டு நாங்கள் போராடினோம், அவர்கள் கூறியதால்தான் நாங்கள் போராட்டத்தில் இறங்கினோம், ஆனால் இறுதியில் என்ன நடந்தது? வெறும் அழிவு மட்டும்தான் என அவர் தெரிவித்துள்ளார்.
6 comments :
M/S Ami & Sam including the father of the tamil nation sowed of their own seed for the destruction of the tamil society
It is true the society was led by some political leaders who were lacking of political philosophy,as a result the society changed itself to a different strange atmosphere.
even today there many idiots to believe the words of sabra saravanabavan and company
கருணா சொல்வதில் உண்மைகள் இருக்கின்றன.
தமிழ், தமிழ்தேசியம் என்று இதுவரைக்கும் அழிவுகள், இழப்புக்களை தவிர எதையுமே உருப்படியாக கண்டது கிடையாது. கிழக்கு மாகாணத்தில் உனக்குமில்லை எனக்குமில்லை என்று கோட்டை விட்டு இப்போ வடக்கையும் கை நழுவ விடப்போறாங்கள்.
எல்லாம் தமிழனின் சாபக்கேடு.
Hon.Minister Karuna was so young during the period that he was in the battle field.Racism was started by tamil leaders in order to Hypnotize the society.The deepest meaning was to continue with the political game
for a long and unimaginable period of time.The tamil society believed them by gripping the political wheel and drove it.Late leaders like Sir Ponnambalam Ramanathan Sir Arunachalam mahadeva Even the late leader who asked for fifty /50 Mr.G.G.Ponambalam QC were the politicians can be stated as political philosophers.The mistake was we entered into political trance because of Fed party.
Until we come out of the political trance,the curse will continue for another generation to generation.
The future younger generation have to suffer for the series of political blunders we have made.
Post a Comment