Tuesday, July 2, 2013

‘நான் குற்றம் செய்திருந்தால் என்னை விலக்கி விடுங்கள்’! - ஜயசுந்தர

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் போய்க்கொண்டி ருப்பதற்கு நிதியமைச்சின் செயலாளரான நான்தான் காரணம் என்று நினைத்தால் என்மீது அவதூறுகள் சொல்லாமல், என் பெயரைக் களங்கப்படுத்தாமல் என்னை அப்பதவியிலிருந்து விலக்கிவிடுங்கள் என திறைசேரியின் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தர குறிப்பிடுகிறார்.

நேற்று இரவு ‘தெரண 360’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்தாடும்போது அவர், ‘நிதியமைச்சின் செயலாளராக இருக்கக்கூடிய எனது கடமை என்னவென்றால், வரவு செலவுத் திட்டத்தின் மூலமும் அமைச்சரவையின் மூலமும் எடுக்கப்படுகின்ற முடிவுகளை நடைமுறைப்படுத்துவதாகும்’ எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது என்று ஒருசிலர் குறிப்பிடுகின்ற கருத்தை நிராகரித்த அவர், பிழைத்தால் எனக்கும் சரியானால் புள்ளிகள் அவர்களுக்கும் இட்டுக்கொள்கின்ற நடமுறை உள்ள தன்மையையும் சுட்டிக் காட்டினார்.

உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்ற இந்நேரம், இலங்கையின் பொருளாதாரமானது மேலெழுந்துள்ளதாகவும் இவ்வாண்டின் முதற்பகுதியில் நாடு 6% பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் கண்டுள்ளது என்றும் அந்நிகழ்ச்சியில் அவர் சுட்டிக் காட்டினார்.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment