Wednesday, July 3, 2013

வடமாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் முன்னாள் புலிகள்!

எல்.ரி.ரி.ஈ யின் முன்னாள் பொறுப்பாளர்கள் சிலர் வடமாகாண சபைக்கான தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப் படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் நிதிப்பொறுப் பாளரும் ஆயுத கடத்தல்காரருமான "கே.பி" என்றழைக் கப்படும் செல்வராசா பத்மநாதன், விடுதலைப்புலிகளின் அரசியல் துறை மகளீர் பிரிவு முன்னாள் பொறுப்பாளரான "தமிழினி" என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமி மற்றும் "தயா மாஸ்டர்" என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி ஆகியோர் வடமாகாண சபைக்கான தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விண்ணப் பித்துள்ளனர்.

வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர்கள் விண்ணப்பித்துள்ள போதிலும் கட்சி வேட்பாளர் நியமனக்குழு முன்னிலையில் இவர்கள் தோன்றவேண்டியிருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

குறித்த மூவரையும் நீதிமன்றங்கள் எதுவும் குற்றவாளிகள் எனகாணவில்லை. எனவே, வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர்கள் செய்துள்ள விண்ணப்பங்களை கருத்தில் எடுக்காமல் விடுவதற்கான காரணமெதுவுமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துக்கொண்டு ஒரு கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த தமிழினி அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் திகதி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2 comments:

  1. மக்கள் ஆதரவு புலிகளுக்கே என்று நினைக்கிறார்களோ -- புலிகள் இல்லாமல் அரசால் அரசு செய்ய முடியாதோ

    ReplyDelete
  2. மக்கள் ஆதரவு புலிகளுக்கே என்று நினைக்கிறார்களோ -- புலிகள் இல்லாமல் அரசால் அரசு செய்ய முடியாதோ

    ReplyDelete