மின்சாரக் கட்டணத்தை கட்டினால் உணவுக்கு வழியில்லை - பொன்சேக்கா
பொதுமக்கள் மின்சாரப் பட்டியலைக் கட்டியதன் பின்னர் உணவுக்காக பணம் மீதமாவதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.
மாவனல்லையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘என்றும் கைக்குக் கைமாற்றி 60 ஆண்டுகள் இந்த நாட்டை அரசியலாளர்கள் ஆட்சிசெய்தார்கள். என்றாலும் அவர்கள் பொதுமக்களின் உள்ளக் குமுறலைத் தெரிந்து கொள்ளவில்லை.
இந்நாட்டுக்குத் தற்போது தேவையாயுள்ளது மூன்றாவது பெரும் சக்தியாகும். மூன்றாவது சக்திதான் எனது ஜனநாயகக் கட்சி. இந்நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதற்காக நாம் முன்னெடுக்கவுள்ள பயணத்திற்கு உங்கள் உதவியைத் தாருங்கள் என நான் மிகவும் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
நாட்டின் தலைவர்கள் இன்பம் அனுபவிக்கிறார்கள். தேனும் பாலும் அவர்களுக்கு வழிந்து வருகின்றது. பொதுமக்களுக்குப் பொய் வாக்குறுதிகள் அளிக்கிறார்கள். பொதுமக்கள் மின்சாரக் கட்டணத்தைக் கட்டினால் அவர்களுக்கு சாப்பாட்டுக்கு வழியில்லை. பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தால் சாப்பிட முடியாது. மீனவர்கள் கடலுக்குப் போய் மூழ்கி மடிகிறார்கள். அரசாங்கம் இவற்றை செப்புக் காசியின் அளவாவது நினைத்துப் பார்ப்பதில்லை. அவ்வாறான கலாசாரம் இங்கு இல்லை. கலாச்சாரம் மாறிக்கிடக்கிறது. ஆசிரியர்கள் முழங்காலில் நிற்கவைக்கப்படுகிறார்கள். பிரதேச சபை உறுப்பினர்களின் பிள்ளைகள் அதிபர்களுக்கு கைநீட்டுகிறார்கள். பௌத்த மதகுருமார்களை மதபீடத்தின் உள்ளேயே கொன்றொழிக்கிறார்கள். பௌத்த பிக்குமார் தீக்குளிக்கிறார்கள். எல்லா இடங்களிலும் சிறுவர் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறார்கள். நீதி நியாயம் என்பது இங்கில்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment