கொலன்னாவையிலிருந்து போதைவஸ்தை அழிப்பதே அடுத்த இலக்கு! – பொதுபல சேனா
யுத்தத்தில் இறந்தவர்களைக் காட்டிலும் கூடுதலானோர் இன்று போதைவஸ்துப் பாவனையினாலேயே இறக்கின்றனர். எனவே போதைவஸ்துப் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்பதே பொதுபல சேனாவின் அடுத்த இலக்கு என அதன் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானஸார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போதே தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ‘போதைவஸ்து ஸ்தலமாக கொலன்னாவ மாறியுள்ளதாகவும், அடுத்ததாக கொலன்னாவையில் நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் மாநாட்டின் போது அந்தத்தை மே லெடுக்கவுள்ளதாகவும் தேரர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment