பொருளியல் கற்கும் மாணவர்களுக்கு மத்திய வங்கியால் போட்டி
இலங்கை மத்திய வங்கியின் தொடர்பூட்டல் திணைக்களம் நாடளாவிய ரீதியில் பாடசாலையில் உயர்தரத்தில் பொருளியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களிடையே Econ Icon என்ற அறிவுத்திறன் போட்டியை 2014 ஆம் ஆண்டு நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் நடாத்தப்படும் இப் போட்டிப் பரீட்சைக்கு பாடசாலை ஒன்றிலிருந்து க.பொ.த. உயர் தரத்தில் பொருளியலை ஒரு பாடமாகக்கற்கும் 3 மாணவர்கள் மட்டும் பங்கு பற்றமுடியும் என்பதுடன் போட்டிப் பரீட்சையிலிருந்து தெரிவுசெய்யப்படும் 8 தமிழ்மொழி மூலம் பாடசாலைகள் தொலைக்காட்சியினூடான போட்டியில் பங்குகொள்ளவுள்ளது.
இப்போட்டி பரீட்சையில் தோற்ற விரும்பும் 3 தமிழ்மொழி மூல மாணவர்கள் கொண்ட குழுவை உங்கள் பாடசாலையிலிருந்து தெரிந்தெடுத்து அதிபரின் உறுதிப்படுத்திய ஒப்பத்துடன் இலச்சினையிட்டு பணிப்பாளர், தொடர்வூட்டல் திணைக்களம், இலங்கை மத்தியவங்கி, இல 30 சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரிக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு 0112477384, 0112477257, 0112477378, 0112398745 எனும் தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும். அத்துடன் மேற்படி போட்டிப் பரீட்சையில் தங்களது பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளுதல் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் நாயகத்தின் அனுமதிக்காக சமர்ப்பித்துள்ள நிலையில் அனுமதி கிடைத்தவுடன் ஒவ்வொரு மாகாணப்பணிப்பாளருக்கும் பிரதிகள் அனுப்பிவைக்கப்படும் என மதிய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2010 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின்தொடர்வூட்டல் திணைக்களம் நாடளாவிய ரீதியில் பாடசாலையில்உயர்தரத்தில் பொருளியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களிடையே Econ Icon என்ற அறிவுத்திறன் போட்டியை வெற்றிகரமாக நடத்தியிருந்தது. இப் போட்டியில், சிங்கள மொழி மூலத்தில் கொழும்பு பாலிகா மகாவித்தியாலயம் தமிழ்மொழி மூலத்தில் மாகனல்ல பதுறியா மத்திய மகா வித்தியாலயமும் வெற்றி பெற்றிருந்தன என திணைக்களப்பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment