பொதுபல சேனா, ராவண பலய தடைசெய்வதற்காக பெண்முடிச்சு போடுகிறார் சந்திரிக்கா!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க மற்றும் மாற்றுக் கொள்கைகள் நிலையத்தின் நிறை வேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவண முத்து, உள்ளிட்ட குழுவினர் ஒன்றிணைந்து பொதுபல சேனா, ராவண பலய என்பவற்றை எதிர்வரும் பொதுநல வாய மாநாட்டின் அமர்விற்கு முன்னர் தடைசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகநம்பகத் தன்மைவாய்ந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
பௌத்த பிக்குமார், இஸ்லாமிய மௌலவிகள், இந்து மதகுருக்கள், கத்தோலிக்க மதகுருக்கள் உள்ளிட்ட குழுவினர் இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளனர்.
இந்நாட்டின் முக்கிய பீடங்களில் உள்ள பௌத்த மதகுருமாரைச் சந்தித்து பொதுபல சேனாவும், ராவண பலயவும் இந்நாட்டில் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு மதங்களிடையே பிளவினை ஏற்படுத்துகின்ற இயக்கங்கள் என்பதைக் கூறிவருகின்றனர். அவர்கள் அதற்காக சில ஆதரங்களையும் கணிப்பீட்டு அட்டணைளையும் எடுத்துச் செல்கின்றனர். இந்தக் குழுவினர் தங்களது கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், அதற்கு உதவிக்கரம் நீட்டுமாறும் கோரி மிக அண்மையில் பெல்லன்வில விமலரதன தேரரையும் சந்தித்திருப்பதாக செய்திகள் கசிகின்றன.
பொதுபல சேனாவையும் ராவண பலயவையும் தடைசெய்யுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு இந்தக் குழு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துவருகின்றது. எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டிற்கு முன்னர் இவ்விரு இயக்கங்களும் தடை செய்யப்பட வேண்டும் என்பதே முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரின் எதிர்பார்க்கையாகும்.
இவர்களுடன் இணைந்து எந்தவொரு பௌத்த மதபீடத்தினதும் எந்தவொரு தேர்ரும் இதற்கு இதுவரை சம்மதம் தெரிவிக்காமையும் குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment